Pages

Search This Blog

December 02, 2018

வேரறுத்த புயலால்...

இயற்கைக்கு என்னதான் தாகமோ
எங்கள் வாழ்வாதரத்தின்மீது...
யானைகட்டி சோறுடைத்த
சோழமண்டலம் - இன்று
கஞ்சிக்கு வழியில்லாமல் ...
அன்னாடங்காய்சிகளாய்...

எங்கள் தலைமுறையின்
எதிர்காலம், சேமிப்புகளெல்லாம்
புதைக்க இடமில்லாமல்
சிதறிகிடக்கின்றன...
கூரைவீடோ , ஓட்டுவீடோ
பாகுபாடில்லாமல்
கௌரவமா வாழ்ந்த எங்களை
நிர்வாணமாக்கி விட்டது..
ஒருவர் முகத்தை ஒருவர்
ஆறுதலாய் பார்த்து
நடைபிணமாய் அலைகிறோம்..
தொலைபேசி விசாரிப்புகளெல்லாம்
எப்படி இருக்கிறீர்கள்(சாகாமல்)
என்று கேட்பதுபோலுள்ளது...

பிள்ளைக்கு “பிள்ளையாய்” வளர்த்த
தென்னை மரங்கள் சாய்ந்த
பொழுதும் ,
 சாய மறுத்த பிள்ளைகள்
தாலியை இழந்த
தங்கையை ஞாவகப்படுத்துகிறது..

இந்த ஊடகங்களால்
டெல்டா விவசாயிகளின்
வெறுங்கைகளுக்கு
முழம் போட்டேன்ன பயன்..
அதனால்
சின்மயி(ர்)களுக்கு
சிக்கலேடுத்துக்கொண்டிருக்கிறது..
இவர்களின் வாதம்
உள்ளே புகமுடியவில்லையென்று
நித்தியானந்தாவின்
படுக்கையறைக்குள் புகுந்து
வேசித்தனம் பண்ணமுடிகிறது??..,.

சென்னைக்கு ஒன்றென்ரால்
இந்தியாவே அலறுகிறது..
ஊடகங்களும் உறங்க மறுக்கிறது...
(வருமானம் அப்படி....)
சென்னை மட்டும்தான்
தமிழ்தேசமென்றால்
இத்தனை அமைச்சர்கள்
எதற்கு???
இத்தனை தொகுதிகள்
எதற்கு???
எங்களுக்கும் அரசு
பின்(னா)ளில் அறிவிக்கும்
நிவா”ரணமாக” ...

ஹெலிகாப்டரில் பறந்து
பார்வையிட்ட எங்கள்
மகாராஜா ...
தேர்தல் நேரமென்றால்
ஹெலிகாப்டரில்
பறந்துகொண்டே
ஓட்டு கேட்பாரா???

அரசியல்வாதிகளின் லட்சனத்தை
எதேதோ புயலில் ஆரம்பித்து
கஜா புயல்வரை பார்த்தாயிற்று
இன்னுமா இந்த நாய்களுக்கு....

அரசாங்கத்து வேலைகூட வேண்டாமென்ற
திமிர் பிடித்த ரத்தம் இன்னும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...
வருவோம்..மீண்டும்
மீண்டு..வருவோம் ...
திமிரோடு..
எங்கள் மண் காக்க..
தலைமுறை காக்க..
எம்மக்களை காக்க..
அரசியலறிந்து நாட்டை காக்க...

ப(பொ)ணந்திண்னி அரசியல்வாதிகளையும்,,
கைகூலி ஊடகங்களையும்,,
மறுதலித்து
அரசியல் தேவையறிந்து..
நாங்கள் வேண்டுவது
ஆட்சி மாற்றமல்ல
அரசியல் மாற்றம் ...
ஜனநாயக மாற்றம்..
                         இவண்,
                 —-ஏகலைவன்—
                              23/11/18
                              ஆம்பலாப்பட்டு..

No comments:

Post a Comment